கம்பம் நகரில் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசல் சார்பில், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'சட்டம் படிப்பு எவ்வளவு முக்கியம்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். மதுரை கிளை வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத், வழக்கறிஞர் ஜஹாங்கிர் பாதுஷா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.