தேனி: திமுக ஒப்பந்ததாரர்கள் வராததால் அதிமுகவினர் சாலை மறியல்

425பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டி. சுப்புலாபுரம், கோத்தலூத்து உள்ளிட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 11 பணிகளுக்கான டெண்டர், திமுக ஒப்பந்ததாரர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக ஒப்பந்ததாரர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறைக்கு முன்பாக அமர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெண்டர் ஒத்திவைக்கப்பட்டதால் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி