தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 10 கி.மீ. சாலைப் பணி கடந்த ஐந்தாண்டுகளாக வனத்துறை தடையால் தடைப்பட்டுள்ளது. இது குறித்து ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ, 15 நாட்களுக்குள் சாலை அமைப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.