தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கைகளில் எலிகள் உலா வருவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கு தேனி, அண்டை மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த அவலநிலை மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவை சுட்டிக்காட்டுகிறது.