தேனி மாவட்டம் கீழக்கூடலூர் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஈசுவரன் (55), கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த அவரைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.