தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கம்பம் சாலையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வேண்டும் என்றும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.