தேனி: ஆண்களுக்கும் மாதம் ரூ.1,000.. அரசு சொன்ன விளக்கம்

0பார்த்தது
தேனி: ஆண்களுக்கும் மாதம் ரூ.1,000.. அரசு சொன்ன விளக்கம்
தேனி: தமிழ்நாடு அரசு, ஆண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக வெளியான செய்திகளுக்கு, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல். வதந்திகளை நம்பவேண்டாம்” என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி