கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சம்பத் (23) மற்றும் காளீஸ்வரன் (26) மீது முன்னால் சென்ற டிராக்டர் மோதியதில், காளீஸ்வரன் உயிரிழந்தார். சம்பத் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.