ஆண்டிப்பட்டி அருகே புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

79பார்த்தது
ஆண்டிப்பட்டி அருகே புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் முகம்மது யாஹ்யா தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தார்பட்டி பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி (60) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 85 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you