தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை இருவர் திருடிச் சென்றனர். பொன்னம்படுகை சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தம் கேட்டு நாகராஜ் துரத்திச் சென்றதில், குமணன்தொழு பகுதியில் இருவர் பிடிபட்டனர். பிடிபட்ட தமிழ்ச்செல்வன் மற்றும் அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.