கம்பம் கார் மீது பைக் மோதியதில் இருவர் படுகாயம்

577பார்த்தது
கம்பம் கார் மீது பைக் மோதியதில் இருவர் படுகாயம்
கம்பம் அருகே நேற்று முன்தினம் கேரளாவைச் சேர்ந்த சந்திப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் டயர் வெடித்தது. காரை ஓரமாக நிறுத்த முயன்றபோது, சரவணன் ஓட்டி வந்த பைக் காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற சரவணன் மற்றும் ஸ்ரீதர் படுகாயமடைந்தனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி