தேனி: நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதல்

52பார்த்தது
தேனி: நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதல்
கடமலைக்குண்டு குமணன் தொழு சாலையில் குமணன் தொழுவைச் சேர்ந்த மாயக்காள் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டூவீலரில் வந்த பிரபாகரன் என்பவர் அவர் மீது மோதினார். இதில் மாயக்காளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து மயிலாடும்பாறை போலீசார் விசாரணை செய்தனர்.

தொடர்புடைய செய்தி