தேனி மாவட்டம் சின்னமனூர் மேகமலை செல்லும் மலைச்சாலையில், ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் சாலையின் குறுக்கே நின்றதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை வனப்பகுதிக்குள் அனுப்பினர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாகனங்கள் பின்னர் மேகமலைக்குச் சென்றன. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.