தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாய்க்கால் கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நந்தகோபால் (29) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, நந்தகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.