
கம்பம் அருகே சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 14.4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் கோட்டாச்சியர் செய்யது முஹமது மற்றும் பெரியார் வடிநிலக்கோட்டை தலைமை பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் மூலம் 8 கிராமங்களில் உள்ள 1640 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


























