
சிலம்பாட்டப் போட்டியில் சாகுபடித்த அரசு பள்ளி மாணவர்கள்
தேனி மாவட்டம் கோம்பை கன்னிகா பரமேஸ்வரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிதா மற்றும் கோம்பை கன்னிகா பரமேஸ்வரி பள்ளி மாணவர்கள் கோபிநாத், கவிஸ்பிரியன், மாணவி லத்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 43-46 கிலோ எடைப்பிரிவில் லத்திகாஸ்ரீ முதலிடம், 40-43 கிலோ எடைப்பிரிவில் அபிதா முதலிடம், 50 கிலோ எடைப்பிரிவில் கோபிநாத் இரண்டாம் இடம், 27-30 கிலோ எடைப்பிரிவில் கவிஸ் பிரியன் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். அருண்சாமுவேல் பயிற்சியில் மாணவர்கள் சிறந்து விளங்கினர்.





























