பெரியகுளம் 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்

657பார்த்தது
பெரியகுளம் 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்
பெரியகுளம் பகுதியில் லட்சுமணன் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, அவரை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.