தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், பகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் விநியோகம் செய்வதில் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த மனு விநியோகம் செய்யாமல் ஆளுங்கட்சியினர், வார்டு கவுன்சிலர்கள் மூலம் வினியோகம் செய்வதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி நகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்கினர்.