பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 9 முதல் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. போடி பகுதியில் தயாரிக்கப்பட்ட உணவு, வடகரை, தென்கரை உள்ளிட்ட 4 இடங்களில் வினியோகம் செய்யப்பட்டது. வடகரை 5வது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர் குணம், வெண்பொங்கலில் கரப்பான் பூச்சி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவுகள் தூய்மையாக வழங்கப்படுகிறதா என தினமும் கண்காணிக்கப்படும் என்றும் நகராட்சி தலைவர் சுமிதா தெரிவித்துள்ளார்.