தேனி மாவட்டம், போடி உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு ஆயுதங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த நினைவூட்டல் பயிற்சி இன்று வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், ஆயுதங்களை முறையாக கையாளுதல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விபத்துகளை தவிர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.