போடி அருகேயுள்ள பொட்டிப்புரத்தைச் சேர்ந்த பூபதி (55) என்பவர் தனது வீட்டில் மதுபானப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சனிக்கிழமை அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் புட்டிகளை போலீசார் மீட்டனர். மேலும், பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.