தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீசார் சோத்துப்பாறை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரிய கம்மாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த தங்கப்பாண்டி என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடமிருந்து சுமார் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தங்கப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.