தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ். தருமத்துப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமார் (28). கார் ஓட்டுநரான இவரிடம் சின்னமனூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த வல்லரசு ரூ. 3,500 கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடனை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் வல்லரசு, செல்வம், மதன் ஆகியோர் சேர்ந்து சந்தோஷ்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.