போடி சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

81பார்த்தது
போடி சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்
போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர் போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிர்வாகம், வாரந்தோறும் வார்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் நகராட்சிப் பணிகளை நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், போடி நகராட்சி 29-ஆவது வார்டில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்புப் பணி ஆகிய பணிகள் வார்டில் தொய்வின்றி நடைபெறுகின்றன என அலுவலர்களிடம் ராஜராஜேஸ்வரி கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்த அவர், மக்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது 29-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி