தேனி மாவட்டம் போடி அருகே பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவம்பர் 22) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு வகையான சிகிச்சைகள் வழங்கப்படும். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் ஆதார், நலவாரிய அடையாள அட்டை நகல், ஓய்வூதிய ஆணை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.