தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரளா செல்லும் போடிமெட்டு மலைச்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. விடுமுறை தினமான இன்று, சுற்றுலாப் பயணிகள் இந்த ரம்மியமான மேகக் கூட்டத்தை ரசித்துச் சென்றாலும், வாகன ஓட்டிகள் பனிமூட்டத்தால் சிரமத்திற்குள்ளாகின்றனர். மலைகளின் முகடுகளை மட்டுமல்லாது மனிதர்களையும் தடவிச் செல்லும் மேகக் கூட்டத்தை ரசித்துச் செல்லும்போது, வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.