தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, மஞ்சளாறு அணை பகுதிகளில் காலை முதல் வெயில் கடுமையாக இருந்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்ததால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.