தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை தொடர் கனமழையால் சேதமடைந்து கிணறு போல் பள்ளமாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.