தேனியில் மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரிகள்
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் இன்று (மே. 20) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பலர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்