தேனி அருகே செங்கல்பட்டியில், மகன் அஜித்குமாருடன் அடிக்கடி தகராறு செய்ததால், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை அபிமன்னன் மற்றும் தாய் ராஜா மணி ஆகியோருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தந்தைக்கு ஆயுள் தண்டனையும், தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.