போடி அருகே ராசிங்காபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.