பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸார் ரோந்துப் பணியின்போது, தாமரைக்குளம் குளக்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற அழகாமி (68) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கி விற்றது தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.