பெரியகுளம் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

569பார்த்தது
பெரியகுளம் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
தேவதானபட்டியில் ஞாயிற்றுக்கிழமை, அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றதாகக் கூறப்படும் ராசு (75) என்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா். தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, புறவழிச்சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற முதியவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் சில்வாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராசு என்பதும், அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி