போடியில் போலீசாரை கத்தியால் மிரட்டியவர் கைது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் இளந்தமிழன் (42). இவர் போடி இரட்டை வாய்க்கால் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இளந்தமிழனை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர் போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அவரைப் பிடித்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.