தேனி மாவட்டம், திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சமூகவிரோதிகள் சிலர் ஆங்காங்கே பாலிதீன் கழிவுகள், கோழி கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதில் அவ்வப்போது தீயிட்டு செல்வதால் அப்பகுதியில் புகைமூட்டம் எழுகின்றது. மேலும் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை தேவை