போடி அருகே பணம் வைத்து சீட்டாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி தாலுகா காவல் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போடி அருகே குப்பணாசாரிபட்டி காளியம்மன் கோயில் அருகே ஒரு பகுதியில் இதே ஊரைச் சேர்ந்த முருகன் (62), சக்திக்குமார் (41), ராதாகிருஷ்ணன் (52), வாசகர் (45), ராமகிருஷ்ணன் (45) ஆகியோரும், மற்றொரு பகுதியில் குப்பணாசாரிபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (55), ரஞ்சித்குமார் (35), பிச்சைமணி (53), கந்தரூபன் (58) ஆகியோரும் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இரண்டு தரப்பினர் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போலீசார் 9 பேரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து ரூ. 900, சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.