உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கோம்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராஜா என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.