பெரியகுளம் கள்ளர் தெருவில் உள்ள அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் திருவிழாவின் போது, இளைஞர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது சரவணன் என்பவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.