தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கராபுரம் அருகேயுள்ள தருமத்துப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த உத்தமன் மகன் அசோக் (32). ஆடுகள் வளர்த்து வரும் இவர், இரவில் ஆடுகளை வீட்டின் அருகேயுள்ள கொட்டத்தில் கட்டிவைப்பாராம்.
இந்த நிலையில், வழக்கம்போல, இரவு ஆடுகளைக் கொட்டத்தில் கட்டிவைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, கொட்டத்திலிருந்து 2 ஆடுகள் திருடப்பட்டிருந்ததுத் தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.