மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இன்று (மே. 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.க, திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.