தேனி மாவட்டம் வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. பொது கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் புகைப்படம், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என கல்லூரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்