தேனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.