தமிழக அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியான 7.5% இட ஒதுக்கீட்டை 10%-மாக உயர்த்தி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் உயர்கல்வி சேர்க்கையில் 2.5% உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.