தேனி அருகே 2017 பிப்ரவரி 6 அன்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத 11 வயது சிறுவனை கடத்தி, பெங்களூருவில் குழந்தை தொழிலாளியாக வேலைக்குச் சேர்த்த வழக்கில், முருகன் (57), பாண்டி (57) ஆகிய இருவருக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், முருகன் சிறுவனை கடத்தி, பாண்டி மூலம் பெங்களூருவில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்தது தெரியவந்தது. இதனையடுத்து 2018 ஜனவரியில் சிறுவன் மீட்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.