தேனி: கார் மீது வேன் மோதி மருந்து கடை உரிமையாளர் பலி

1பார்த்தது
தேனி: கார் மீது வேன் மோதி மருந்து கடை உரிமையாளர் பலி
தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் காா் மீது வேன் மோதியதில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த சுனில் (52) என்ற மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள சிலமலையில் மருந்துக் கடை நடத்தி வந்த சுனில், கேரளத்துக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பும்போது லோயா் கேம்ப் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வேனில் இருந்த மூவா் காயமடைந்தனா். குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி