தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு மலை கிராமத்தில் கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. மக்கள் அதனைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். மேலும், அப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.