தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலைய போலீசார் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போழுது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதிலிருந்த சேக் பீர், சேக் முகமது, தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.