தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டெம்போ ட்ராவலர் வேன், பெரியகுளம் அருகே எ. புதுப்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் முன் பகுதியில் புகை ஏற்பட்டுள்ளது. உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த 15 பேர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். இருப்பினும், வேன் முழுவதும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்தது.