தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (58) என்பவர், சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வீரபாண்டி புறவழிச் சாலையில் அவரது சேலை சக்கரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.