கம்பம்: ராணுவ வீரரை கத்தியால் குத்திய வழக்கு; 7 பேர் கைது

77பார்த்தது
கம்பம்: ராணுவ வீரரை கத்தியால் குத்திய வழக்கு; 7 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரவணக்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரஹ்மான் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஹ்மான் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து 2 தினங்களுக்கு முன்பு சரவணக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில், அவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது சம்பந்தமாக ரகுமான் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்